Enable Javscript for better performance
திருவாரூர் மைய நூலகத்தில் மருத்துவ ஆலோசனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில்  எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் தேசிய நூலக இயக்கம் ஆகியவை  இணைந்து சிறுநீர் பாதை தொற்றுநோய் மருத்துவ ஆலோசனை முகாமை திங்கள்கிழமை நடத்தின.
    இந்த முகாமில் சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடி ஒளிபரப்பின் மூலம் சிறப்பு மருத்துவர் செல்மா பேசுகையில், அடிக்கடி ஏற்படும் சிறுநீர்பாதை தொற்றுக்களினால் உடலில் நீர் பற்றாக்குறை , சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீர் பை பாதிப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். சுகாதாரமான வகையில் கழிவறைகளை பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் இந்நோய் குறித்து எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும் என்றார்.
    இதில் போட்டித் தேர்வு மாணவர்கள்,  வாசகர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் வடிவேலு, மா. ஆசைத்தம்பி மற்றும் மைய நூலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai