சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மதுப்போதையில் இருந்த தந்தை தனது இரு வயது பெண் குழந்தையை தூக்கி தரையில் அடித்ததில் அக்குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. 
    மன்னார்குடி அருகேயுள்ள வேங்கைபுரத்தைச் சேர்ந்தவர் வே. வேல்முருகன் (28). இவரது மனைவி அமுதா (25). தம்பதியருக்கு நித்யா (5), அவந்திகா (இரண்டரை) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கூலி வேலைக்கு சென்று வரும் வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் அதிகமானதால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 
    வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் இருந்த வேல்முருகனை மனைவி அமுதா கண்டித்ததால், ஆத்திரமடைந்த வேல்முருகன் அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அவந்திகாவை தூக்கி தரையில் அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவந்திகா மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைப் பெற்று, தீவிர சிகிச்சைக்காக  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய வேல்முருகனை தேடிவருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai