Enable Javscript for better performance
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத் துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம்  திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
     நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்  தலைமையில் அரசு  அலுவலர்கள் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்- வழிமுறைகள் குறித்த குறிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
    மேலும், முதியோர் கொடுஞ்செயல் தடுப்பு என்ற தலைப்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3 மாணவர்கள், 3 மாணவியருக்கு  ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். 
    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)  ரெங்கநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங்  உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai