சுடச்சுட

    

    அரவைக்காக 950 டன் சன்னரக நெல் திருப்பூருக்கு அனுப்பி வைப்பு

    By DIN  |   Published on : 20th June 2018 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலத்திலிருந்து திருப்பூருக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், தலையாமங்கலம், ஆதனூர் பகுதிகளில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதில், 950 டன்  நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அரவைக்காக சரக்கு ரயிலில் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai