சுடச்சுட

  

  அறிவிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில், 2016-இல் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போரட்டத்தின்போது பேச்சுவார்த்தையில் எழுத்துப் பூர்வமாக அளித்த வாக்குறுதிப்படி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண வேண்டும், 2018 பிப்ரவரியில் மின்துறை அமைச்சர் அறிவித்தப்படி ரூ. 380 தினக் கூலியாக வழங்க வேண்டும், கே 2 ஒப்பந்தத்தில் பணியாற்றியவர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
  அமைப்பின் திட்டத் தலைவர் ஆர். ராமசாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், செயலர் வி. சுப்பிரமணியன், சிஐடியு தலைவர்கள் பாண்டியன், ஜி. பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர் டி. கோவிந்தராஜ் போராட்டத்தை முடித்து வைத்தார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai