சுடச்சுட

  

  மன்னார்குடியை அடுத்த வடுவூரில் செயல்பட்டு வரும், வடுவூர் மக்கள் நலக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்துக்கு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
  கூட்டத்தில், வடுவூரில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும், சுற்றுவட்டப் பகுதிகளின் விவசாயத்துக்கும் பயன்பட்டுவரும், வடுவூர் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜுக்கு நன்றி தெரிவிப்பது. மேலும், தூர்வாரும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைப்பின் நிர்வாகிகள் ஜி. அரிகிருஷ்ணன்,பி. ராவணன், ஆர். சாமிநாதன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai