சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 20th June 2018 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊராட்சி செயலருக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
     ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம ஊராட்சி எழுத்தர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால் ஒன்றியப் பணிகள் பாதிக்கப்பட்டன .
    இதேபோல், வலங்கைமான் ஒன்றியத்திலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கும் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai