சுடச்சுட

    

    சேலம் 8 வழிச் சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரிக்கை

    By DIN  |   Published on : 20th June 2018 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் 8 வழிச் சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானத்துடன் பிற தீர்மானம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும், சேலம் 8 வழிச்சாலை என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க உள்ள நடவடிக்கைகளை கைவிட வேண்டும், மதுவினால் தமிழகத்தில் 53 சதவீத குடும்பங்கள் பாதிப்படுவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மாவட்ட அமைப்பாளர் தியாகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai