சுடச்சுட

  

  தமிழ்நாடு பொன் விழா ஆண்டையொட்டி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி

  By DIN  |   Published on : 20th June 2018 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி, ஜூன் 29-ஆம் தேதி திருவாரூர் திருவிக கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன என தெரிவித்துள்ளார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1967-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட  சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக 1969 ஜனவரி 14-ஆம் தேதி தமிழ்நாடு என்று நமது மாநிலத்துக்கு பெயர் மாற்றப்பட்டது.  எதிர்வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நடந்து 50-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டி, தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  தமிழக முதல்வர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழர் பெருமையையும் அனைவரும் உணரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூன் 29-ஆம் தேதி திரு.வி.க. அரசு கலைக்  கல்லூரியில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்தை போட்டி நாளில் நேரில் அளித்து போட்டியில் பங்கேற்கலாம். 
  ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒவ்வொரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளில் மாணவர்கள், நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். போட்டி நாளன்று காலை 9.30 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள், மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாணசுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அடியொற்றி அமையும்.
  போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே அறிவிக்கப்படும். பரிசுகள் அரசு விழா ஒன்றில் பின்னர் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.5000, 2-ஆம் பரிசு ரூ.3000, 3-ஆம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில போட்டிக்கு பங்குபெற தகுதி பெறுவர்.
  மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000 மற்றும் நான்கு கிராம் தங்கப் பதக்கம், 2-ஆம் பரிசு  ரூ. 25,000 மற்றும் நான்கு கிராம் தங்கப் பதக்கம், 3-ஆம் பரிசு ரூ.10,000 மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும். கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதம் இல்லாதவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கமாட்டார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மார்பளவு 2 புகைப்படங்களை போட்டி நாளன்றே அளிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai