சுடச்சுட

    

    மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

    By DIN  |   Published on : 20th June 2018 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே ரயில் முன் பாய்ந்து மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். 
    காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூருக்கு வந்தபோது, சிங்களாஞ்சேரி ரயில்வே கேட்  அருகே ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில்வே போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
    அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் மயிலாடுதுறை, கூரைநாடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற முகவரி அடங்கிய ஆதார் அட்டை இருந்துள்ளது. மேலும், அவரிடமிருந்த தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில், அவர் தட்டச்சு இயந்திரங்கள் பழுது நீக்குபவர் என்பதும், குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்ததும் தெரியவந்தது.
    இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள அவருடைய உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai