சுடச்சுட

    

    மானியத்தில் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 20th June 2018 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் நன்னீர் கெண்டை மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் குளங்கள் அமைக்க விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மூலம் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நன்னீர் கெண்டை மீன்குஞ்சுகளின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் புதிய நன்னீர் கெண்டை மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் குளங்கள் அமைக்க ஆகும் மொத்த செலவு ரூ. 25 லட்சத்தில் 40 சதவீத மானியம் ரூ.10 லட்சம் பின்னிலை மானியமாக வழங்கப்படவுள்ளது.
    மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க தேவையான நீர் ஆதாரமுள்ள மற்றும் தமிழ்நாட்டில் குடியிருப்பினை கொண்ட ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களுடன் ஆட்சியர் கூடுதல் அலுவலக கட்டடத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
    விண்ணப்பங்கள் அதிகம் பெறப்பட்டால் மூப்பு நிலை பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய பணி ஆணை கிடைத்தப் பிறகு பணியை தொடங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-224140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai