சுடச்சுட

  

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி திருவாரூரில் நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 48-ஆவது பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் காட்டூரில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர்களுடன் கேக் வெட்டி உணவுகள் வழங்கி கொண்டாடப்பட்டன. தொடர்ந்து, அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். இதேபோல திருவாரூர் நகர காங்கிரஸ் சார்பில் கோயிலில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
  மன்னார்குடியில்...
  மன்னார்குடி மேல ராஜ வீதியில் உள்ள சிங்கமகா காளியம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டு ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
  இதில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்கள் நெடுவை குணசேகரன், வடுகநாதன், மாவட்ட நிர்வாகிகள் டி. பாலசுப்பிரமணியன், சங்குகோபால், தொழிற்சங்க நிர்வாகி பஞ்சன், மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகி மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, நகர மகளிர் பிரிவு தலைவர் கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai