Enable Javscript for better performance
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள்   அறிவித்த போராட்டம், அதிகாரிகள் அளித்த வாக்குறுதியையடுத்து  ஒத்திவைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீத அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதனால் ஒருவர் 3, 4 மையங்கள் வரை கூடுதல் பொறுப்புகள் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் புகார் தெரிவித்துவந்த அங்கன்வாடி பணியாளர்கள், காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஜூன் 15- ஆம் தேதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாவிட்டால், மைய சாவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை (ஜூன் 20) ஈடுபடுவோம் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
     இந்நிலையில் புதன்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், திட்ட அலுவலரிடம் மைய சாவிகளை ஒப்படைக்கச் சென்றனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நேர்முக உதவியாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
    இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், மாவட்ட துணைச் செயலர் எஸ். வைத்தியநாதன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி. தவமணி, மாவட்டப் பொருளாளர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதில், ஓரிரு மாதங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து,  அங்கன்வாடி மைய சாவியை ஒப்படைக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai