சுடச்சுட

  

  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 21st June 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து, அதிமுக பொதுக் கூட்டத்தில் அவதூறு பேசியதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கண்டித்து மன்னார்குடியில் அமமுகவினர் புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  அன்னவாசல்தெருவில் உள்ள அமமுக அலுவலகத்திவிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில வழக்குரைஞர் அணித் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கு. சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாநிலத் தேர்தல் பிரிவு துணைச் செயலர் க. மலர்வேந்தன், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச் செயலர் எஸ். சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலர் ஆர். சரவணன்செல்வன், மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலர் க. அசோகன், மேற்கு ஒன்றியச் செயலர் ரெங்கராஜ், நீடாமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலர் சங்கர், மன்னார்குடி நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai