சுடச்சுட

  

  ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 21st June 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்தக் கோரி ஆசிரியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருவாரூரில் தனியார் பள்ளியில் பட்டதாரிஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2-ஆம் நாளான புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றிருந்தனர். நீண்ட நேரமாகியும் உரிய அலுவலர்கள் வராததால் கலந்தாய்வு தொடங்கவில்லை. பின்னர், நீண்ட நேரத்துக்குப் பிறகு பணியிடங்கள் காலியில்லை என தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையறிந்து, ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு அழைப்பு விடுத்துவிட்டு காலிப் பணியிடங்களை மறைத்து முறைகேடுகளில் அலுவலர்கள் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும், ஆசிரியர் காலிப் பணியிட மாறுதல் கலந்தாய்வை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கலந்தாய்வு மையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai