சுடச்சுட

  

  குடவாசல் வட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

  By DIN  |   Published on : 21st June 2018 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடவாசல் வட்டத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேந்துள்ளனர்.
  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சேங்காலிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், நிகழாண்டு 1-ஆம் வகுப்பில் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) 42 பேரும், மற்ற வகுப்புகளில் 13 பேரும் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்களின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் த. இளங்கோவன், கு. கவிதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை து. இந்திரா, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வி. கோவிந்தராஜன், துணைத்தலைவர் அம்பிகாபதி, மகளிர்க் குழு உறுப்பினர் சங்கத் தலைவர் காயத்திரி, அமைப்பாளர் சண்முகவடிவேலு, ஆசிரியைகள் வினோதா, கனிமொழி, தீபா, சிவசங்கரி, இந்துமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  கடந்தாண்டு இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 160-ஆக இருந்தது. அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை குறைந்துவரும் நிலையில், சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்தாண்டைக் காட்டிலும், நிகழாண்டு மாணவர்களின் சேர்க்கை 180 ஆக அதிகரித்துள்ளது. 
  குடவாசல் வட்டத்தில் கடந்தாண்டை விட நிகழாண்டு அரசுப் பள்ளிகளில், அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்திருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai