சுடச்சுட

  

  நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை முன் பருவ தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. 
  திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் பயிற்சியைத் தொடங்கிவைத்து, குறுவைப் பருவத்துக்கு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.  முனைவர் ராமசுப்ரமணியன் விதை ரகங்கள், விதை நேர்த்தி , விதைப்பு பற்றி விளக்கமளித்தார். முனைவர் அனுராதா மண்ணில் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும், அதை நிவர்த்தி செய்யும் முறைகள்குறித்தும் எடுத்துரைத்தார். பயிற்சி உதவியாளர் ஜெ. வனிதா அறுவடை பின்சார் தொழில்நுட்பம் பற்றி  விளக்கமளித்தார். 
  பின்னர் மண் மாதிரி எடுத்தல் பற்றியும், இயந்திர நடவுக்கு பாய் நாற்றங்கால் பராமரிப்பு முறைகள் பற்றியும் செயல்விளக்கமளிக்கப்பட்டது. இதில் 120 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai