சுடச்சுட

  

  மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை தத்துவள மையத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 
  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  23.4.2018 அன்று கைவிடப்பட்ட 1.900 கிராம் எடையுள்ள ஆண் குழந்தை  சிசிக்சைக்காக 30.4.2018 முதல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. 
  இந்நிலையில், அந்த ஆண் குழந்தையை ஆட்சியரின் உத்தரவுப்படி சேலம் லைப் லைன் தொண்டு நிறுவனத்தின்கீழ் இயங்கும் தத்துவள பராமரிப்பு மையத்திடம் ஒப்படைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அந்த ஆண் குழந்தைக்கு சீனிவாசன் என பெயரிட்டு சேலம் லைப் லைன் தொண்டு நிறுவனத்தின்கீழ் இயங்கும் தத்துவள மைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். 
  நிகழ்ச்சியில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெ. செல்வராசு, திருவாரூர் குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆர். ரவிச்சந்தரன் ஆகியோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai