சுடச்சுட

  

  தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 21st June 2018 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேட்டை கண்டித்து திருவாரூரில் காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முத்துப்பேட்டை, மங்கல் தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் விவசாய சேவைகளை தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு வழங்கிய பயிர்க் காப்பீடு தொகையில் சங்க வளர்ச்சி நிதி என பிடித்தம் செய்த தொகையை அவரவர் சேமிப்பு கணக்கில் வரவு வைக்க வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு சேமிப்புக் கணக்கு, பங்குத் தொகை கணக்கு, சிக்கன சேமிப்பு கணக்குக்கு உரிய பாஸ் புத்தகம் வழங்க வேண்டும், இச்சங்கத்தின்கீழ் இயங்கும் அங்காடி பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்க நிர்வாகி எம். வசந்தி தலைமை வகித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai