புதிய தீயணைப்பு நிலையத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்
By DIN | Published on : 21st June 2018 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து முதல்வர் தீயணைப்பு நிலையத்தில் திறந்த வைத்தபோது, பேரளம் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீயணைப்பு நிலைய வாகனத்தை பார்வையிட்டார். இத்தீயணைப்பு நிலையம் 2017 ஜூலை 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, நவ.15 -ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையத்தில் 11 தீயணைப்பு வீரர்கள், 3 வாகன ஓட்டுநர் மற்றும் பழுது நீக்குநர்கள், 2 முதன்மை தீயணைப்பு வீரர்கள், 1 தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகிய பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையத்தின் மூலம் பேரளம் பேரூராட்சியை சுற்றி 20 கிராமங்கள் பயன்பெற உள்ளன. மேலும், எதிர்பாராத தீ விபத்து ஏற்படும்பட்சத்தில் நிலைய தொலைபேசி எண் 04366-239101 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, திருவாரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் பரஞ்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.