சுடச்சுட

    

    திருவாரூர் அருகே பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
    திருவாரூர் அருகே உள்ள கழனிவாசல் கேணியடி தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மனைவி வேதவள்ளி (45). அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா (31) தினமும் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூராக தெருவில் நின்று தகாதவார்த்தைகளால் பேசுவாராம்.
     இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வழக்கம்போல் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளையராஜாவை, வேதவள்ளியின் மகன் சக்திவேல் தட்டிக் கேட்டாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் சக்திவேலை இளையராஜா கத்தியால் குத்த முயன்றாராம். இதை தடுக்க வந்த வேதவள்ளிக்கு காயம் ஏற்பட்டது. மேலும், வேதவள்ளிக்கும் இளையராஜா கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வேதவள்ளி அளித்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, இளையராஜாவை கைது செய்தனர்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai