சுடச்சுட

  

  திருவாரூர் அருகே மண் அள்ளுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
  திருவாரூர் அருகே அலிவலத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (42). இவர் சில நாள்களுக்கு முன்பு அலிவலம் மயான வடிகால் மதகு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிலர் அவரை வழிமறித்து, கடந்த ஆண்டு இதே இடத்தில் மண் அள்ளியபோது தடுத்ததாக கூறி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அய்யப்பன் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அலிவலம் பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல்முருகன், சிலம்பரசன், சுதாகர், சத்தியமூர்த்தி ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai