சுடச்சுட

  

  மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து தர்னா போராட்டம்

  By DIN  |   Published on : 21st June 2018 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்லூரியில் நடைமுறையில் இருந்து வரும் ஷிப்ட் முறையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து தர்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
  இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளிலும் மற்றும் ஆய்வு படிப்பில் என 3,000-த்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 
  இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் கலை பாடப் பிரிவுகள் காலை நேரத்திலும், அறிவியல் பாடப் பிரிவுகள் மதிய நேரத்திலும் என இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வந்தன.
  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரி நிர்வாகம் திடீரென ஒரு அறிவிப்பை  வெளியிட்டது. அதில், புதன்கிழமை முதல் காலை நேர ஷிப்டில் அறிவியல் பாடப் பிரிவுகளும், மதியம் நேர ஷிப்டில் கலைப் பாட பிரிவுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  இதையடுத்து, புதன்கிழமை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி ஷிப்ட் முறையை கடந்த ஆண்டைப்போலவே, கலை பாடப் பிரிவு காலையும், அறிவியல் பாடப் பிரிவு மதியமும் நடைபெற வேண்டும்.  அதில் மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி, கல்லூரி முதல்வர் அறையின் அருகில் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
  பின்னர், கல்லூரி முதல்வர் சித்ரா கலாராணி, பேராசிரியர்கள், மாணவ பிரிதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கல்லூரிக்கு வருகிற ஜூலை 1 -ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தர்னாவில் இருந்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai