Enable Javscript for better performance
ராஜகோபாலசுவாமி கோயிலில் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜகோபாலசுவாமி கோயிலில் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

    By DIN  |   Published on : 21st June 2018 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், ஆனி மாதம் நடைபெறும் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவத்தையொட்டி, கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் 10 நாள்கள் திருவிழா நடைபெறும். இதையொட்டி, ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ராஜகோபாலசுவாமி கோயிலில், பெருமாள் சன்னிதியின் எதிரே அமைந்துள்ள கருட ஸ்தம்பத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியை பட்டாச்சாரியார்கள் புதன்கிழமை ஏற்றினர்.
    வியாழக்கிழமை (ஜூன் 21) முதல் ஒவ்வொரு நாளும், ராஜகோபாலசுவாமி பல்லக்கில் புறப்பட்டு நான்கு வீதிகளைச் சுற்றி, திருமஞ்சன வீதி வழியாக ஹரித்ராநதி தெப்பகுளம் தென்கரையில் உள்ள வாகன மண்டபம் சென்றடைவார். அங்கு மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் வடக்குவீதி வழியாக கோயிலை அடைவார்.
     திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஹரித்ராநதி தெப்ப உத்ஸவம், வரும் 28-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. அப்போது ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபாலசுவாமி தெப்பத்தில் எழுந்தருளி, ஒருமுறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai