Enable Javscript for better performance
வலங்கைமான் ஸ்ரீவைத்தீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    வலங்கைமான் ஸ்ரீவைத்தீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸரா அபிஷேகம்

    By DIN  |   Published on : 21st June 2018 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வலங்கைமானில் அருள்பாலிக்கும்  ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 5 -ஆம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேக பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
    இதையொட்டி, காலையில் கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு, கடம் புறப்பாடு செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி- அம்பாள் பிராகாரப் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    ஹோம பூஜைகளை திப்பிராஜபுரம் சிவாச்சாரியார் சுரேஷ், கோயில் குருக்கள் குமார் ஆகியோர் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சு. சிவராமகிருஷ்ணன், மீனாராம் டிரஸ்ட் வைத்தீஸ்வரர் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் சா. குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால் மற்றும் வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai