Enable Javscript for better performance
ஆசிரியர் பொது மாறுதல் குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் பொது மாறுதல் குளறுபடிகளை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 22nd June 2018 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் பொது மாறுதலில் நடைபெறும் குளறுபடிகளை சரி செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு வெளி மாவட்டங்களுக்கு மாற்றல் கேட்டுச் செல்பவர்களுக்கான கலந்தாய்வாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து 200 -க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
    இந்நிலையில், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களுக்கு மட்டுமே மாறுதல் கேட்க வேண்டுமென கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
    திருவாரூர்  மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு தொலைதூர மாவட்டங்களிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தற்போது கலந்தாய்வின் மூலம் தங்கள் மாவட்டத்துக்கு மாற்றல் கிடைக்கும் என நம்பியிருந்த சூழலில் கலந்தாய்வு மையத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணி மாறுதல் கேட்டு வந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈவேரா ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.
    மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட முன்னாள் செயலர்  மதிவாணன், பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஜூலியஸ், அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன், வட்டச் செயலாளர்கள் அமிர்தராஜ், பாலசுப்பிரமணியன், அய்யப்பன், வேதரத்தினம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
    இதுகுறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஈவேரா கூறியது : எந்த ஆண்டும் இல்லாத வகையில் புதிய கட்டுப்பாடுகளை ஆசிரியர் கலந்தாய்வில் திடீரென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 8 மாவட்டங்களைத் தவிர மற்ற எந்த மாவட்டங்களுக்கும் பணி மாறுதல் கிடையாது; கேட்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் கிடையாது எனவும் அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    கடந்த 5 ஆண்டுகளாக பணி மாறுதலின்றி வெகு தூரத்திலிருந்து வந்து பணியாற்றும் ஆசிரியர்களை தங்களது சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டும். இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai