Enable Javscript for better performance
ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
    இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, துர்க்கையம்மன், சண்டிகேசுவரர், உத்ஸவர் தெட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai