சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் திருப்பூர் சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.
    இதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாற்றுக்கட்சியினர் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு செந்துண்டு அணிவிக்கப்பட்டது. துணைச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். நகரச் செயலாளர் கே. ஆனந்த் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai