சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், தலையாமங்கலம் திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட நெல் என மொத்தம் 950 டன் நெல் மூட்டைகள், 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai