Enable Javscript for better performance
குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களைக் கண்காணிப்பது அவசியம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களைக் கண்காணிப்பது அவசியம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 22nd June 2018 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களைக் கண்காணிப்பது அவசியம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
    மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் நோக்கமானது, மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே. குறிப்பாக, குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் பெற்றவுடன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் அந்த இல்லங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.
    மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி தெரிவித்து:
    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில், குழந்தைகளிடம் அலுவலர்கள் தனியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும். அதற்கு உண்டான பொறுப்பு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
    ஒரு மாதத்துக்கு முன்பு திருவாரூர் வட்டம் அச்சுதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 9 -ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம், குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் நிறுத்தப்பட்டது. 
    தொடர்ந்து, இந்த கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் லைன்ஸ் கிளப் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறுமியின் கல்வி தொடர கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், சுகாதாரத்துறை இணை இயக்குநர் உமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai