சுடச்சுட

  

  தினமணி சார்பில் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் யோகா தினம்

  By DIN  |   Published on : 22nd June 2018 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் (தினமணி) மற்றும் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து யோகா தினத்தை வியாழக்கிழமை கொண்டாடின.
  4 -ஆம் ஆண்டு யோகா தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூரில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து யோகா தினத்தை கொண்டாடியது. இதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பிறை ஆசனம், பாதஹஸ்தாசனம், புஜங்காசனம் ஆகியவை அடங்கிய சூர்ய நமஸ்காரம், உட்கட்டாசனம், ஏகபாதாசனம், கருடாசனம் என நின்று கொண்டு செய்யும் நிலை ஆசனங்களும், பத்மாசனம், கோமுகாசனம், வஜ்ராசனம், பத்ராசனம், யோகமுத்ரா என அமர்ந்த நிலை ஆசனங்களும் செய்விக்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் வி. லெட்சுமி அசோக், நிர்வாக மேலாளர் வி. கோபி ஈஸ்வரன், துணை முதல்வர் ஆர். இந்திரா, ஆசிரியர் தீபா ஜம்புநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். யோகா நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் எல். பாண்டியன், எஸ். புருஷோத்தமன், வி. வினோதவல்லி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai