சுடச்சுட

  

  குடவாசல், கொரடாச்சேரி வட்டத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
   நிகழ்ச்சியில், கல்லூரியின் யோகா பட்டயம் பயிலும் மாணவர்கள் சிறப்பான முறையில் ஆசனங்களைச் செய்தனர். இதில், கல்லூரியின் தாளாளர்  எம்.ஜி. சீனிவாசன்,  சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடர் சுவாமி ஐஸ்வர்யானந்தா   கல்லூரியின் முதல்வர் நா. கனகசபேசன் துணை முதல்வர் ஹேமா, யோகா ஆசிரியர்  கி. மணிவாசகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், மஞ்சக்குடி, சுவாமி தயானந்த சரஸ்வதி பள்ளியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடவாசல் வட்டம், செம்மங்குடி மேல்நிலைப்பள்ளி, கொரடாச்சேரி ஒன்றியம் ஆணைவடபாதி நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலும் உலக யோக தினம் கொண்டாடப்பட்டது.

  செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில்...
  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் என். கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
  ஞான ஆசிரியர் விருதுபெற்ற மன்னார்குடி பேராசிரியர் கஜேந்திரன் யோகாவைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். பள்ளியின் தாளாளர் எஸ். நடராஜன், நிர்வாக இயக்குநர் எம். விக்னேஷ், செயலாளர் என். அநிரூபிதா உள்ளிட்டோர் யோகாவின் நன்மைகள் பற்றி பேசினர்.
  யோகா பட்டப் படிப்பு முடித்த 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் 25 பேருக்கு சான்றிதழைப் பள்ளியின் மூத்த முதல்வர் என். சுகுணவதி வழங்கினார். மனவளக்கலை மன்ற பேராசிரியர் ஜெகதீஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai