Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவி, உதவி தொகை, இலவச பேருந்து பயண அட்டை, மூன்று சக்கர நாற்காலி, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன காதொலி கருவி, வேலைவாய்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகள் கோரி 79 மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதுவரை  நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 679 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 470 மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதம் 209 மனுக்கள் தகுதியில்லாத காரணங்களினால் நிராகரிக்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரெங்கநாதன், வருவாய்க் கோட்டாட்சியர்கள் (திருவாரூர்)  முருகதாஸ், (மன்னார்குடி) பத்மாவதி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இருதயராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai