சுடச்சுட

  

  தடையை மீறி ஆர்ப்பாட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 67 பேர் கைது

  By DIN  |   Published on : 23rd June 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், திருவாரூர், மன்னார்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 67 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீஸாரிடம் அனுமதி கோரினர். இதற்கு போலீஸார் அனுமதி அளித்திருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென அனுமதி மறுக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
  திருவாரூரில்...
  இந்நிலையில், திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும், துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  கட்சியின் மாவட்டச் செயலர் வடிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 35 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
  மன்னார்குடியில்...
  இதேபோல், மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலிருந்து, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வி.த. செல்வம் தலைமையில் ஊர்வலமாக வந்து, பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதாக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலர் ஆர். ரமணி, கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அ. சுரேஷ், ஒன்றியச் செயலர் எம். ஜெயக்குமார் உள்ளிட்ட 32 பேர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai