சுடச்சுட

  

  திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் நேதாஜி மெட்ரிக். பள்ளி ஆகியவை சார்பில் யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
  நிகழ்ச்சிக்கு நேதாஜி கல்விக் குழுமச் செயலர் வெ. சுந்தர்ராஜூ தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் ரேவதி வெங்கட்ராஜலு, மெட்ரிக். பள்ளி நிர்வாகி சரண்யா சுந்தர்ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பி.எஸ். மீனாட்சி வரவேற்புரையாற்றினார். நேதாஜி கல்விக் குழுமச் செயலர் வெ. சுந்தர்ராஜூ தலைமையுரையாற்றியனார். நிர்வாக அறங்காவலர் ரேவதி வெங்கட்ராஜலு, மெட்ரிக். பள்ளி நிர்வாகி சரண்யா சுந்தர்ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  புதுக்கோட்டை ஆனந்த யோகா பவுண்டேசனின் தலைமை யோகா ஆலோசகரும், சிகிச்சை நிபுணருமான செல்வராஜ் பங்கேற்று பேசுகையில், யோகா என்பது வாழ்க்கையில் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். யோகா செய்வதன் மூலம் உடல்நலமும், மனவளமும் பெறும். எனவே, உடலை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைத்துக்கொள்ள யோகா மிகவும் அவசியம் என்றார்.
  விழாவில், மெட்ரிக். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் யோகா நிகழ்வுகள் நடைபெற்றன. 
  முன்னதாக கல்லூரி முதல்வர் பி.எஸ். மீனாட்சி வரவேற்றார். மெட்ரிக். பள்ளி முதல்வர் ராமராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், திருச்சி ஊர்க்காவல் படைத்தளபதி பாரி, துணை முதல்வர் இரா. அறிவழகன், தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆனந்தி, கல்லூரி, மெட்ரிக். பள்ளி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
  நேரு யுவகேந்திரா சார்பில்...
  மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா மூலம் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நன்னிலம் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரியின் முதல்வர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். வருவாய்க் கோட்டாட்சியர் சோ. முருகதாஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு யோகா முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. இதில், நேரு யுவகேந்திரா கணக்காளர் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai