சுடச்சுட

  

  மக்கள் நலன் காக்க மருத்துவரும், போலீஸாரும் இணைந்து பணியாற்றுவது அவசியம்

  By DIN  |   Published on : 23rd June 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களின் நலன் காக்க மருத்துவத் துறையும், காவல் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் தஞ்சை சரக டிஐஜி லோகநாதன்.
  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது: சிறு வயதில் மருத்துவராக வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், தற்போது காவல் துறையில் பணியாற்றினாலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பது மகிழ்ச்சி. மக்களின் நலன் காக்க மருத்துவத் துறையும், காவல் துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடை சட்டங்கள் குறித்தும், மருத்துவமனை கடமைகள் பற்றிய சட்டங்கள் குறித்தும் மருத்துவர்களும், மாணவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.  மருத்துவர்கள், மருத்துவம் சாராத துறைகளிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார் லோகநாதன். 
  விழாவில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசியது: இந்த மருத்துவமனையின் கட்டமைப்பு மிகவும் மேம்பட்டுள்ளது. காவல் துறைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார் அவர். 
  விழாவுக்கு தலைமை வகித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் பேசியது: காவல் துறையும், மருத்துவத் துறையும் 24 மணி நேரமும் பணி புரிகின்றன. இரண்டு துறையை சேர்ந்தவர்களிடம் கஷ்டமான நேரங்களில் வரும் மக்கள் நல்லது நடந்தால் பாராட்டுவதில்லை. ஆனால், தவறு நடந்தால் இரண்டு துறைகளில் உள்ளவர்களும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாவார்கள். இதை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர். 
  பின்னர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு குழுவினருக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா, நிலைய மருத்துவ அலுவலர் (பொ) அப்துல் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் 
  பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai