சுடச்சுட

  

  விவசாயிகள் கோடை உழவில் ஈடுபடலாம்: வேளாண்மைத்துறை அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 23rd June 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகள் கோடை உழவு செய்யலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
  இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
  முத்துப்பேட்டை வட்டாரத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் கோடை உழவில் ஈடுபடலாம். கோடை உழவின் மூலமாக இறுக்கமான மண் இலகுவாகி, மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு, மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகமாகி, மழைநீர் எவ்வித சேதாரமுமின்றி, நிலத்துக்கு அடியில் செல்கிறது. இதன்மூலம் மண் அரிப்பு முற்றிலும் தடுக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் மண்ணில் விடப்பட்ட தட்டைகள், மண்ணோடு மண்ணாக கலந்து மக்கி உரமாகிறது. எனவே, கோடை உழவினால் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் உணர்ந்து, உழவு செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai