சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினிகள் மற்றும் அதன் உபகரணங்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
    நீடாமங்கலம் அருகேயுள்ள நகர் கிராமத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்குள்ள ஆங்கில மொழி ஆய்வக அறையில் 11 கணினிகள் இருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை காலை பயிற்சி நிலைய ஊழியர் ஒருவர், ஆய்வக அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மற்ற அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
    இதுபற்றி தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு கணினிகள் (மானிட்டர், கீ போர்டு, வெப் கேமாராவுடன்) திருட்டுபோனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai