சுடச்சுட

  

  திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் இளங்கோ இலக்கிய மன்றத்தின் 64-ஆம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பள்ளித் தலைமையாசிரியர் சு.தி. சுந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில், மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கோ. ஸ்ரீதரன், உயர்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் எஸ். வெங்கடாசலம், முதுகலை ஆங்கில ஆசிரியை தி. சிவரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி கவிஞர் வீரமுருகேசன் பங்கேற்று, தமிழ் இசைத்தேன் எனும் தலைப்பில் இலக்கிய சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில், தமிழாசிரியர்கள் அ. பிரான்சிஸ், ந. சங்கரன், முதுகலைத் தமிழாசிரியர் கோமல் தமிழமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai