சுடச்சுட

    

    காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 24th June 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம உதவியாளர்கள் ஜூன் 25-ஆம் தேதி மாநிலம் தழுவிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பட்டை நாமம் போட்டு, தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளன என்றார் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்செல்வன்.
    இதுகுறித்து நீடாமங்கலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கிராம உதவியாளர்களுக்கு அரசாணை வெளியிட்டு பல்வேறு சலுகைளை வழங்கினார். அதன்மூலம், தகுதியுடைய கிராம உதவியாளர்கள் பலரும் கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். 2016-இல் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
    கர்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்களையும் அரசிடம் அளித்துள்ளோம். தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் குழுவிடமும் ஊதிய முரண்பாடுகள் குறித்து எடுத்து கூறியுள்ளோம். வருவாய் கிராம உதவியாளர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
    பல்வேறு கோரிக்கைகள் குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்தவித பலனுமில்லை.இதன் காரணமாகவே பட்டை நாமம் போட்டு தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 25-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வருவாய் கிராம உதவியாளர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai