Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் தின பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், இந்துஸ்தான் கேட்டரிங் மற்றும் சமுதாயக் கல்லூரி ஆகியவை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் ரயில் நிலையம் அருகே தொடங்கிய பேரணியை ரயில்வே நிலைய மேலாளர் ராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
    இந்துஸ்தான் கேட்டரிங் மற்றும் சமுதாயக் கல்லூரியின் தாளாளர் கணேஷ், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது, புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai