சுடச்சுட

  

  வலங்கைமான் வட்டம், கொட்டையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபீஷ்ட வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  விழாவையொட்டி, ஜூலை 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 2-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜூலை 2-ஆம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, சுப்ரபாதம், நித்யபூஜை, த்வாரபூஜை, காலை 7 மணிக்கு கும்ப மண்டல, பிம்ப, அக்னிசதுஸ்தான யாகசாலை 3-ஆம் கால பூஜைகள், ஹோமங்கள், மகாபூர்ணாஹீதீ, க்ருஹப்ரீதி, தசதானங்கள், காலை 9.5 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் விமானம் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண மஹோற்சவம், மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபீஷ்ட வரதராஜ பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.
  விழாவுக்கான ஏற்பாடுகளை கொட்டையூர் கிராமமக்கள், நீடாமங்கலம் ஸ்ரீசந்தான ராமகைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai