Enable Javscript for better performance
ஜூலை 8-க்குள் கிராம விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில், ஜூலை 8-ஆம் தேதிக்குள் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராமங்களில் உள்ள அனைத்து இளைஞர்களிடையே விளையாட்டின் சிறப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் அவர்கள் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் சிறந்த வீரர்களாக உருவெடுப்பார்கள். அத்துடன் அவர்களுக்குள் சமூக ஒற்றுமையும் வளரும் என்பதை கருத்தில் கொண்டு, பைக்கா திட்டத்தில் அமைக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் சிறந்த முறையில் பராமரித்து பயன்படுத்தும் வகையிலும், கிராம மக்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராம ஊரட்சிகளிலும் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் இப்போட்டிகள் ஜூலை 8-ஆம் தேதிக்குள் நடத்தப்படவுள்ளன. இதில், ஆடவர் மற்றும் மகளிருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளும், கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளும், ஆடவருக்கான கால்பந்து போட்டிகளும் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கென ஆடவர் மற்றும் மகளிருக்கு தலா இரண்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். ஒரு ஊராட்சியில் குடியிருப்பவர் வேறு ஊராட்சியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கக் கூடாது.
    தனித்திறன் மற்றும் குழுப் போட்டிகள் நடைபெறும் இடம், நாள் மற்றும் விவரம் போன்றவைகள் அந்தந்த ஊராட்சிச் செயலர் மற்றும் கிராம சிறப்புத் தனி அலுவலரால் முன்னரே தெரிவிக்கப்படும். போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு போட்டிகளை பொறுப்பேற்று நடத்த உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai