சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அரசு டாஸ்மாக் கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி சாலையில் வெள்ளகுளம் எதிரே உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த 8-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான மதுபுட்டிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
    இதுகுறித்து மதுபானக் கடை மேற்பார்வையாளர் உத்தராபதி அளித்த புகாரின்பேரில், முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில், தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராசு (எ) குமரேசன்(19), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விஷ்வா (19) ஆகிய இருவரும் மதுபானக் கடையில் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai