சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன், மனைவி உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டனர்.
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த ஏத்தக்குடியைச் சேர்ந்தவர் நாகூர்கனி (32). இவரது மனைவி தாரகை (28). குடும்பப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில், தாரகையை நாகூர்கனி அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, வெள்ளிக்கிழமை நாகூர்கனியை கைது செய்தனர்.
    நாகூர்கனியின் சகோதரி ஸ்ரீதேவி (34)) தனது கணவர் ராஜாவுடன் (40) கர்ணாவூர் திருவாசக குளத்தெருவில் வசிக்கிறார். அதே பகுதியில் உள்ள காலனி தெருவில் கொலையுண்ட தாரகையின் சகோதரர் ஆர். ஐயப்பன் (26) வசிக்கிறார்.
    இந்நிலையில், சனிக்கிழமை தாரகையின் இறப்பு குறித்து ஸ்ரீதேவியிடம் ஐயப்பன் பேசியபோது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஐயப்பன் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ராஜா, ஸ்ரீதேவி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மன்னார்குடி ஊரக காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai