சுடச்சுட

  

  திருவாரூரில் சனிக்கிழமை தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
  பணி நிறைவு பெறும் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ. தனமணி, மாவட்டக் கல்வி அலுவலர் தி. சரோஜா, பணி நிறைவு பெறும் தலைமையாசிரியர்கள் வெ. பாலசுப்ரமணியன் (திருநெய்ப்பேர்), எஸ். அறிவானந்தம் (கோவில் வெண்ணி), கே. மைனர்செல்வம் (எடமேலையூர்), ஜி. ரவிச்சந்திரன் (பாலையக்கோட்டை), சி. தவமணி (வலங்கைமான்), மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் தெய்வபாஸ்கரன், பாலதண்டாயுதம், சீனிவாசன், கலைச்செல்வி, இந்திராகாந்தி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்கள், 25 ஆண்டுகள் பணி முடித்த தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழாவாக நடைபெற்றது.
  மாவட்டத் தலைவர் எம். தங்கராசு தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர் எம். ரவி, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர். விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai