Enable Javscript for better performance
புல் வெட்டும் கருவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் புல் வெட்டும் கருவி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் 2017 - 2018 -ஆம் ஆண்டுக்கான மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி விவசாயிகளுக்கு 14 எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.
    இத்திட்டத்துக்காக 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும், ஆவின் நிறுவனத்திடமிருந்து 4 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் விவசாயிடம் குறைந்தபட்சம் 2 கால்நடைகள், 0.5 ஏக்கர் தீவனப்புல் வளர்த்திருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் 25 சதவீத முதலீடு செய்வதற்கான தகுதிகளுடன் இருக்க வேண்டும்.
    மாவட்ட மகளிர் குழு உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ஓர் கால்நடையும், தலா 0.25 ஏக்கர் தீவனப்புல் சாகுபடியில் இருக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இலவசம் மற்றும் மானிய திட்டங்களில் பயனாளியாக இருக்கக் கூடாது. ஓர் புல்வெட்டும் கருவியின் விலை ரூ. 20,000.
    வேளாண் பொறியியல் துறை மூலம் விற்பனை நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு கருவிகள் கொள்முதல் செய்யப்படும். திட்டத்தில் பயனடைய விரும்புவோர் முழு விவரங்கள் தெரிந்துகொள்ள அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai