சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை தாக்கியதாக தந்தை, மகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    விக்கிரபாண்டியம் ஐயப்பநாதன் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கராசு மனைவி இந்திரா (40). இவர் கடந்த 18-ஆம் தேதி ஊராட்சிக் குடிநீர் பொதுக் குழாயிலிருந்து, தான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு தண்ணீர் பிடித்து ஊற்றி வந்தாராம். இதை அதே பகுதி பாலத்தடித் தெருவைச் சேர்ந்த நைனான் கண்டித்தாராம்.
    இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    இதில், ஆத்திரமடைந்த நைனான் (48), தனது மனைவி மாலா மற்றும் மகன் வெங்கட்ராமன் (23) ஆகியோருடன் சேர்ந்து தாக்கியதில், காயமடைந்த இந்திரா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து நைனான், வெங்கட்ராமன் ஆகியோரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai