சுடச்சுட

  

  மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: அமைச்சர் ஆர். காமராஜ்

  By DIN  |   Published on : 24th June 2018 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்துக்குள்பட்ட கட்டளை, கோயில்பத்து ஆகிய கிராமங்களில் கூட்டுறவுத்துறையின் பகுதி நேர நியாயவிலைக் கடைகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால் முன்னிலை வகித்தார்.
  பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர். காமராஜ் கூறியது:
  அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் பயன்பெறும் வகையில், தொடர்ந்து செயல்படுத்தப்படும். திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 579 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 142 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் 3,46,291 குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர் என்றார்.
  இந்நிகழ்ச்சிகளில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் எஸ். ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, கும்பகோணம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், திருவாரூர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை தலைவர் கலியபெருமாள், கூட்டுறவு சங்கங்களின் மேலாண் இயக்குநர் செளந்தர்ராஜன், மாவட்டக் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் திவாகர், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாப்பா சுப்ரமணியன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கே.ஜி. சுவாமிநாதன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பாஸ்கர், அவளிவநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சங்கர், பேரூராட்சி முன்னாள் தலைவர் மாஸ்டர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai