மக்கள் நேர்காணல் முகாம்
By DIN | Published on : 24th June 2018 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், சாத்தனூர் ஊராட்சியில் அண்மையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், பொதுமக்கள் பங்கேற்று 259 மனுக்களை வழங்கினர்.
முகாமுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ. சேகர், சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியர் பி. ரெங்கநாதன், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இருதயராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ். கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா 102, பட்டா மாற்றம் 25, பட்டா நகல் 4, முதியோர் உதவித்தொகை 41,விதவை உதவித்தொகை 4, ஊனமுற்றோர் உதவித்தொகை 4, ரேஷன் கார்டு குறித்து 41, நில அளவை 2, கணக்குப் போக்குவரத்து 2, வட்ட வழங்கல் அலுவல்துறை சம்பந்தமாக 12, பொதுப்பணித்துறை தொடர்பாக 7, தையல் இயந்திரம் கோரி 9, மின்சார வாரியம், மாற்றுத்திறனாளி நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கால்நடை மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பாக தலா ஒன்று உள்பட 259 மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினர்.
இதில், மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.